சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஒய்.எம்.சி.ஏ காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் என்பது ஆசியாவிலேயே உடற்கல்விக்கான முதல் கல்லூரி ஆகும். இது சென்னையின் மையப்பகுதியான நந்தனத்தில் அமைந்துள்ளது.  இது அமெரிக்காவின், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஹாரி க்ரோவ் பக் என்பவரால் 1920 இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு இருபாலர் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இங்கு D.P.Ed, B.P.E, B.P.Ed, B.M.S, M.P.Ed, M.Phill, Ph.D மற்றும் பிற டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகள். பி.எஸ்.எஸ்.எஸ் படிப்பு ஆர்சிஐ, இந்திய புனர்வாழ்வு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த  கல்லூரியின்  வளாகத்தில் ஒய். எம். சி. ஏ. கல்லூரி சிறப்புப் பள்ளி என்ற பெயரில் கற்றலில் குறைபாடு, ஆட்டிசம், மூளை வளர்ச்சித்திறன் குறைவு, மல்ட்டிபிள் டிஸார்டர் உள்ளிட்ட மருத்துவச் சிக்கல்களைக் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்காக பகல்நேரக் கவனிப்பு மையம் (day care centre) அமைந்துள்ளது.

இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் உடகல்வி தொடர்பான படிப்புகள் படித்து வருகின்றனர். இதில் பலருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தன. பின்னர் அவை காணாமல் போனது.

இந்த நிலையில், தற்போது கடந்த  3 மாதமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும் பேராசிரியர் ஜான் ஆபிரகாம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை மகளிர் போலீசார் பேராசிரியர் ஜான் ஆபிரகாமை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.