சென்னை: சென்னை, தி.நகரில்  புதியதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என சேசகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி , பத்மாவதி கோவில் கட்டுமான பணிகள் 13 ஆண்டுகளாக பல பிரச்னைகளை கடந்து முடிவடைந்து,  தற்போது குடமுழுக்கு நடைபெற உள்ளது என்றார்.

சென்னை தியாகராய நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 17-ம் தேதி நடைபெறுவதாக, தேவஸ்தானத்தின் தமிழகம், புதுச்சேரிக்கான ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த நிலையில், கோயில் வளாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தவலர், பத்மாவதிதாயாருக்கு கோயில் கட்ட வேண்டும் எனசென்னை மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அந்த வகையில், கடந்த 13 ஆண்டுகளாக பல பிரச்சினைகளை கடந்து, தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2021பிப்.13-ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன.

ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கோயிலில் வரும் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 12-ம் தேதி (நேற்று) மாலை பூஜைகள் தொடங்கி, 16-ம் தேதி வரை காலை, மாலை இரு வேளையும் ஹோமங்கள், வழிபாடுகள் நடைபெறும். மார்ச் 17-ம் தேதி காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, காலை 10 மணி முதல் 11 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து, சுவாமி தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேக விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்கிறார்.

முன்னதாக, 16, 17-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். பக்தர் களுக்கு தேவையான அனைத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது இலவச தரிசன முறையே பின்பற்றப்படும். சிறப்பு தரிசனம், பூஜை, வழிபாடுகளுக்கு டோக்கன் முறையில் கட்டணம் பெறுவது குறித்து தேவஸ்தானம் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.