சென்னை: விநாயகர் ஊர்வலத்தில் தடையை மீறிய 40 பேர் கைது

சென்னை:

சென்னையில் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த முயன்ற இந்து அமைப்பினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 5 நாள் வரை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில் இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தன.

இந்நிலையில், சில பகுதிகள் வழியே ஊர்வலம் செல்வதற்கு போலீசார் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். திருவல்லிக்கேணியில் இருந்து ஐஸ் ஹவுஸ் நோக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களில் 40 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
English Summary
Chennai: Police arrest 40 hindu organisation persons for violating orders in Vinayagar statue procession