டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் சேவையின் 2வது கட்ட விரிவாக்கத் திட்டம் தொடங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில்  மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தமிழக எம்.பியின் கேள்விக்கு பதில் அளித்த  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் கவுசல் கிஷோர் கூறியதாவது:

நகர்ப்புற வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் நகர்ப்புற போக்குவரத்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு மாநிலங்களே பொறுப்பு. நாட்டின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி கோரி மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. மத்தியஅரசும் உதவி செய்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை மெட்ரோ ரயில் 2-வது திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டன. மாநில அரசுத்துறை திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது. 118.9 கிலோமீட்டருக்கு இது செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.