ரூ.1 கோடி சம்பளத்தில் வேலைபெற்ற சென்னை ஐஐடி மாணவர்கள்

சென்னை:

ந்தியாவின் நம்பன்1 தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக திகழ்ந்து வரும் சென்னை ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது.

நாட்டிலேயே நம்பர் 1 ஐஐடியாக சென்னை ஐஐடி திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து 3வது முறையாக முதலிடத்தில் வந்து சாதனை படைத்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உலக அரங்கில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற கேம்பர் இன்டர்வியூவில், பல மாணவ மாணவிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேர்வாகி உளளனர். ஆப்பிள்,  மைக்ரோசாப்ட்,,ரூபாக், உபெர், இண்டீட், இன்டெல் போன்ற பல நிறுவங்கள் அவர்களை தேர்வு செய்துள்ளது.

இந்த ஆண்டு  256 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தியதாகவும், அதன் காரணமாக  968 பணியிடங்கள் வாய்ப்பு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் வெளிநாட்டை சேர்ந்தவை.

கேம்பஸ்  இன்டர்வியூவுக்கு மொத்தம் 1,100 பேர் பதிவு செய்து இருந்தாகவும், இவர்களில் 837 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.  இது கடந்த ஆண்டைவிட அதிகம். கடந்த ஆண்டில் 817 பேருக்கு வேலை வாய்ப்பு அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இவர்களில்  10 மாணவர்கள் ஆண்டு சம்பளம்  ஒரு கோடி ரூபாய்க்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
English Summary
India's No-1 Institute Chennai IIT students got job for Rs 1 crore salary per Annam