சென்னை

திமுக கோவையில் துணை ராணுவப்படை பாதுகாப்பைக் கோரி அளித்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கோவையில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்காது எனக் கூறப்பட்டிருந்தது.   மேலும் அங்குத் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது.

இன்று அந்த மனு மீதான விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில், “அனைத்து இடங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  குறிப்பாகக் கோவையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நேர்மையாகத் தேர்தல் நடத்தப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது.

இந்த உறுதிமொழியை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக அளித்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.  உயர்நீதிமன்றம், “தேர்தல் ஆணையத்தின் உறுதி மொழி மற்றும் காவல்துறை முழு ஏற்பாடுகள் செய்துள்ளதாக உறுதி அளித்தது ஆகியவற்றின் அடிப்படையில் துணை ராணுவப் பாதுகாப்பு தேவை இல்லை என கருதி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என அறிவித்துள்ளது.