சென்னை:

42வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியில் 820 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1.5 கோடி புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தகப்புழுக்களின் ஆவலை நிறைவேற்றுவது சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சி. இந்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிய மைதானத்தில் இன்று மாலை தொடங்குகிறது.   இந்த  புத்தக்கண்காட்சியை இன்று மாலை 6 மணி அளவில் தமிழக முதல்வர்   எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து   ஜனவரி 5ம் தேதி கண்காட்சி வளாகத்தில் தமிழன்னை சிலை திறக்கப்படுகிறது. இதனை அமைச்சர் மாபா பாண்டியராஜன் திறந்து வைக்கிறார்.

புத்தக கண்காட்சிக்காக 820 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழுக்கு 487 அரங்குகள், ஆங்கிலத்துக்கு 294 அரங்குகள், மல்டிமீடியாவுக்கு 13 அரங்குகள், 26 பொதுவான அர அரங்குகள் என மொத்தம் 820 அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்த கண்காட்சியில் சுமார் 12 லட்சம் தலைப்புகளில் 1 கோடிக்கும் அதிகமான புத்தகங் கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. அனைத்து வகையான புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

புத்தக்கண்காட்சி  பிற்பகல் 2 மணி முதல்  இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன்,  நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் தங்கர்பச்சான், ஆட்சியர் வெ.இறையன்பு, எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.