சென்னை,

ம்பிகை ஒளி தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கலந்து கொண்டார்.

நம்பிக்கை ஒளி  தொண்டு நிறுவனம் மூலம் புற்று நோயால் அவதியுற்று வரும் குழந்தை களுக்கான சிகிச்சை செலவை ஏற்று குணப்படுத்தி வருகிறது.

‘குழந்தைகள் புற்றுநோய்க்கு தீர்வு 2017’ என்ற புதிய திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 60 குழந்தை களுக்கான  புற்றுநோய் சிகிச்சைகான செலவை ஏற்றுள்ளது நம்பிக்கை ஒளி தொண்டு நிறுபவனம்.

இந்த நம்பிக்கை  ஒளி அறக்கட்டளை கடந்த  15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 124  குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ சிகிச்சையை காஞ்சி காமமோடி குழந்தைகள் மருத்துவமனை மூலம்கொ செயல் படுத்தி வருகிறது. இதில், குஜராத், ஆந்திர மாநிலங்களை சேர்ந்த குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு இந்தி புதிய திட்டத்தின்கீழ் 60 குழந்தைகளுக்கான சிகிச்சை செலவை ஏற்றுள்ளதாக தொண்டு நிறுவன நிர்வாகி பிரியா ராமச்சந்திரன் கூறினார். மேலும்,  சிகிசை பெற்றுவரும் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வரை  செலவிடபடுவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு 60 குழந்தைகளுக்கான செலவை தொண்டு நிறுவனம் ஏற்றுள்ளதாக கூறினார்.

மேலும், ஏற்கனவே சிகிச்சை பெற்ற குழந்தைகளில்  85 சதவிகித குழந்தைகள் நலம்பெற்று உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கேன்சர் பாதித்த குழந்தைகளுடன்  பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய முரளி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயப்படக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் சிகிச்சை பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரெலா பேசும்போது,  புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் எஸ் பாலசுப்ரமணியன், தொழிலதிபர் ஏசிமுத்தையா, சன்மார் குரூப் தலைவர் என்.சங்கர், தொண்டு நிறுவன தலைவர் பிரியா ராமச்சந்திரன்,  கிரிக்கெட் வீரர் முரளி விஜய், டாக்டர் முகமது ரேலா ஆகியோர் பங்கேற்றனர்.