சந்திராயன் 2’ ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படும்….இஸ்ரோ தலைவர் சிவன்

டில்லி:

சந்திராயன் 2 செயற்கைகோள் ஜனவரி 3ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘சந்திராயன்- 2 செயற்கை கோள் வரும் ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜி.எஸ்.எல்.வி.எம்.கே -2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது. இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. இதனால் தாமதம் ஏற்படுகிறது.

காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்.. உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள் சந்திராயன் -2 ஆகும். இது 40 நாட்கள் பயணித்து நிலவை அடையும்’’ என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chandrayan 2 satelite will be launched in January says ISRO chairman Sivan, சந்திராயன் 2’ ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படும்....இஸ்ரோ தலைவர் சிவன்
-=-