- Advertisement -spot_img

CATEGORY

ஆசிரியர் பக்கம்

எஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..

வணக்கம் எஸ்.வி.சேகர் சார்... உங்களை கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அறிவேன். சமீபத்தில் ஒரு தகவல் கேள்விப்பட்டேன். இஸ்லாமிய பெரியவர் ஒருவர், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதில் ஏதோ பிரச்சினை. நண்பர் மூலம் உங்களுக்கு தகவல் சொல்கிறார்....

முட்டாள்தனமான பொது விடுமுறைகள்: சரி செய்ய ஒரு தீர்வு!

  டி.வி.எஸ். சோமு பக்கம்: இன்று மகாவீர் ஜெயந்தி. தமிழக அரசு மற்றும் இந்திய அரசு இன்று அரசு விடுமுறை விடுகிறது. மகாவீரர் ஜெயந்தி என்பது , சமண சமயத்தின் 24வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் ஆகும். இந்த நாளை எத்தனைப் பேர் கொண்டாடுகிறார்கள் என்பதில் இருக்கிறது, இந்த விடுமுறைக்கான முட்டாள்த்தனம். இந்தியாவில் சமணர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். 2011ம் ஆண்டு, இறுதியாக இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. சி. சந்திரமௌலி என்பவரது தலைமையில் இந்த மக்கட்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது தெரிந்த விபரம், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே, 1 லட்சத்து 93 ஆயிரத்து 422 பேர். ( தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சத்து47 ஆயிரத்து 30 பேர்.) இந்திய மக்கள் தொகையில் எந்தெந்த மதத்தினர் எத்தனைப் பேர்? இந்துக்கள் 79.80% இஸ்லாமியர் 14.23% கிறித்துவர் 2.30% சீக்கியர் 1.72% பவுத்தர்கள் 0.70% சமணம் 0.37% பார்சி 0.06% (2001) பிறசமயம்/ சமயமின்மை 0.9% ஆகும். அதாவது ஒட்டுமொத்த இந்தியாவில் 50 லட்சம் பேருக்கும் குறைவாகவே சமணர்கள் இருக்கிறார்கள். இவர்கள்கொண்டாடும் பண்டிகைக்கு சுமார் 121 கோடி பேர் உள்ள நாட்டில் பொது விடுமுறை. பெரும்பாலானவர்களுக்கு மகாவீர் ஜெயந்தியோ அதை எந்த மதத்தவர் கொண்டாடுகிறார்கள் என்பதோ தெரியாது. “ஏதோஇன்றைக்கு விடுமுறையாம்” என்கிற அளவிலேதான் தகவல் தெரியும். இது போன்ற விடுமுறைகள் தேவையா? இதனால் எத்தனை மக்களுக்குச் சிரமம்? உதாரணமாக, வங்கியை எடுத்துக்கொள்ளுங்கள். மகாவீர் ஜெயந்தி என்பதால் இன்று (29.03.2018) விடுமுறை. நாளை வருடாந்திர கணக்கு முடிவு, என்பதால் விடுமுறை. அடுத்து சனிக்கிழமை மட்டும் வங்கி இயங்கும். மீண்டும் அடுத்த நாள் ஞாயிறு என்பதால் விடுமுறை. அடுத்தநாள்வருடாந்திர கணக்கு முடிவு என்பதால் விடுமுறை. அதாவது தொடர்ந்து ஐந்து நாட்கள். இடையில் ஒரு நாள் மட்டும்விடுப்பு. இதே போல பண்டிகைகளுக்காக.. அதாவது பெரும்பாலோர் கொண்டாடாத பண்டிகளைகளுக்காக எத்தனை எத்தனைஅரசுவிடுமுறைகள். உதாரணமாக  தமிழக அரசின் விடுமுறைகளைப் பார்ப்போம். ஆங்கில புத்தாண்டு, பொங்கல்,  திருவள்ளுவர் தினம்,  உழவர்திருநாள்,  குடியரசு தினம்,  தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர்ஜெயந்தி, புனித வெள்ளி,  வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவுவங்கிகள் ) ,  தமிழ்ப் புத்தாண்டு, ...

மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!

டி.வி.எஸ். சோமு பக்கம் ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று. “ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது..  ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்..  பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர்...

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மனசாட்சிக்கு…! : ஒரு  பகிரங்கக் கடிதம்

டி.வி.எஸ். சோமு பக்கம்: தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு.. அன்பார்ந்த வணக்கம். சமீபத்தில்தான் பெரும் போராட்டம் நடத்தினீர்கள். அதில் (ஓரளவு) வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள். அந்தப் போராட்டத்தை பயணிகள் – பொதுமக்கள் எவரும் எதிர்க்கவில்லை. நியாயமான  ஊதியம், பணி (பண)ப்...

சிக்கலான கேள்விகள்.. அதிர்ந்த வைரமுத்து.. அனுமதித்த ஞாநி!

டி.வி.எஸ். சோமு பக்கம் திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவை பத்திரிகைகளுக்காக பேட்டி எடுப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. மிகுந்த திட்டமிடல் உள்ள அவர், தன்னை நோக்கி விமர்சனங்கள் வரும்படியான சூழலை ஏற்படுத்திக்கொள்ளவே மாட்டார். “முன்னதாகவே கேள்விகளை கேட்டு...

ரஜினியின் புத்தாண்டு செய்தி: அரசியலை மீண்டும் ஒத்திவைத்தார்!

டி.வி.எஸ். சோமு பக்கம்: நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி அமைக்கப்போவதாகவும், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்துக் கொண்டாடுகிறார்கள்.. தொலைக்காட்சிகளிலும்...

வாழ்க்கைப் பாடம்

டி.வி.எஸ். சோமு பக்கம்: சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் அதை வீடு என்று சொல்ல முடியாது. சற்றே பெரிய கூடு என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட பத்துக்கு பத்து அறைதான், மொத்த வீடும். வீட்டின் பாதிக்கு...

பாம்புகள், நண்பர்கள்! “அறம்” இயக்குநர் கவனிக்க…

டி.வி.எஸ். சோமு பக்கம்: சமீபத்தில் அறம் இயக்குநர் கோபி நயினார், “தடுப்பூசி பாம்பை விட மோசமானது”   என்று பேசியிருக்கறார். தடுப்பூசி போடுவது சரியா, தவறா என்ற வாதம் நடந்துகொண்டிருக்கிறது. நான் அதைக் குறிப்பிடவில்லை. பாம்பை உதாரணாக்கியது...

நான் சர்வாதிகாரியானால்…. : நா. காமராசன் சொன்னது என்ன தெரியுமா?

டி.வி.எஸ். சோமு பக்கம்: 1998 அல்லது 99. "குமுதம்" வார இதழில் செய்தியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.  பொதுவாக மக்கள் பிரச்சினைகள் குறித்தே அதிகம் பேட்டி எடுத்திருக்கிறேன். கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனாலும் அவ்வப்போது, “காண்ட்ரவசி கிறுக்கு” என்னைப் பிடித்துக்கொள்ளும்....

“சாதி இல்லை” என்று சான்றிதழ் பெறுவது அறிவுடமைதானா?

டி.வி.எஸ். சோமு பக்கம்: "பள்ளிக்கூட சான்றிதழ்ல சாதியை ஒழிச்சா, சாதியே ஒழிஞ்சிரும்" என்று பேசுவோர் பலர். இன்று கௌசல்யாவின் செய்தியாளர் சந்திப்பில் ஊடகர் (!) ஒருவரும் இதே பாணியில் கேட்டார். ஆகவே, இந்த மீள் பதிவு: "பிற்படுத்தப்பட்ட...

Latest news

- Advertisement -spot_img