johnson2
வாஷிங்டன்,
ஜான்சன் அன்டு ஜான்சன் பவுடர் உபயோகித்ததால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 70மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
உலகில் பிரபலமான அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஜான்சன் அன்டு ஜான்சன் கம்பெனி.
உலகப்புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் தேவையான விதவிதமான அழகு சாதனப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறது.
குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் ஜான்சன் பேபி பவுடர் மற்றும் பேபி சோப், பேபி ஆயில், பேபி ஷாம்பு போன்றவைகள் மிகவும் பிரபலம்.
johnson1
 
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விலை அதிகம் என்றாலும் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் டால்கம் பவுடரால் புற்று நோய் வருவதாக சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பெரும்பாலான புகார்களில் ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் முழுமையான ஆதாரம் இல்லை என்று,  ஆதாரத்துடன் சமர்பிக்கப்பட்ட 2 வழக்குகளும்  அமெரிக்காவில்  தள்ளுபடி செய்யப்பட்டன.
டெபோரா கினாச்சினி (Deborah Giannecchini)  என்ற அமெரிக்க பெண் ஆதாரத்துடுன்  தாக்கல் செய்த வழக்கில் ஜான்சன் அன்ட் ஜான்சன் கம்பெனி மீது கூறப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது.
jjohnsonfull
இந்த பெண் கடந்த பல வருடங்களாக அந்த உடலின் பவுடரை மறைவான பகுதிகளில் பூசி வந்துள்ளார். இதனை யடுத்து தனக்கு கருப்பை புற்று நோய் ஏற்பட்டதாக வழக்கு தொடுத்துள்ளார்.
உரிய ஆதாரங்களுடன் இந்த வழக்கு தொடரப்பட்டதால், விசாரணையில் அந்த பெண்ணின் புற்றுநோய்க்கு பவுடர்தான் காரணம் என்று கோர்ட்டு உறுதி செய்தது.
அதைதொடர்ந்தது,  அந்த பெண்ணிற்கு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.468 கோடி ரூபாய் ஆகும்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த நிறுவனம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் முலுந்த் என்ற பகுதியில் தயாரிக்கப்படும்  ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.
இதையடுத்து அந்த கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.