கனடா செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள் – 15,000 பேருக்கு கனடா குடியுரிமை!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் 15ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

canada

கனடா நாட்டில் தங்கி கல்வி கற்காவும், அங்கேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்தியர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்கு சென்று படிக்கவும், வேலைபெறவும் இந்தியாவை சேர்ந்த பலர் கனடா நாட்டு தூதரகத்தின் உதவியுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு கனடாவில் படிக்கவும், வேலை செய்யவும் 3விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகளில் வெற்றிப்பெற்றால் மட்டுமே தங்கள் கனவை விண்ணப்பதாரர்கள் நனவாக்க முடியும்.

தனியார் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்து நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள ஆயிரக்கணகான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளது. இதற்கு முன்பாக அவர்கள் நிரந்தர குடியுரிமை(பி.ஆர்) பெற வேண்டும் என்பது அவசியம். அதன்படி பார்க்கையில் சுமார் 15 ஆயிரம் இந்தியர்கள் கனடா நாட்டு குடியுரிமையை பெற்றுள்ளதாக புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. இவரள் கடந்த அக்டோபர் மாதம் வரியில் குடியுரிமை பெற்றவர்கள். இது 2017ம் ஆண்டை காட்டிலும் 50 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கனடா குடியுரிமையை பெறுவதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்ற்னர். இவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 15,600 பேருக்கு கனடா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 11 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-