புல்லட் ரயில் திட்டம் – விவசாய நிலங்கள் காப்பாற்றப்படுமா ?

புல்லட் ரயில் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புல்லட் ரயில் திட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் மத்திய அரசிற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாம்பழம் மற்றும் சப்போட்டா பயிரிடும் விவசாய நிலங்களை புல்லட் ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்த மாநில அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சில உள்ளூர் அர்சியல்வாதிகள் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
bullet train
மாற்று வேலைவாய்ப்பு உத்தரவின்றி தங்கள் நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் இந்த போராட்டம் அரசிற்கு மிகப்பெரிய தடையாக மாறியுள்ளது. ஜப்பான் நாட்டு ஆதரவுடன் 17பில்லியன் டாலர் விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தினால் டிசம்பர் மாதம் முடிக்க வேண்டிய பணிகள் நிறைவடையாது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து அகமதாபாத்தை இணைக்கும் புல்லட் ரயில் திட்டத்திற்கு 108 கி.மீ. நீளமான பகுதிகளை கையகப்படுத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சந்தை மதிப்பிற்கு 25சதவிகித பிரீமியம் தொகையை வழங்கவும், விவசாயிகளுக்கு நிலத்திற்கு ரூ.5லட்சம் அல்லது 50 சதவிகித தொகையை வழங்கவும் குஜராத் அரசு முன்வந்துள்ளது.

புல்லட் ரயில் திட்டம் தோல்வியில் முடிவடைந்தால் ஜப்பான் அரசின் ஒத்துழைப்பு ஏஜன்சி இந்தியாவிற்கு வழங்கும் சில கடன்களை தாமதப்படுத்த நேரிடும் என்று மூத்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் இத்தகைய கவலையை தீர்க்கும் விதமாக ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் இந்திய அதிகாரிகளுடன் டோக்கொயோவில் கலந்தாலோசிக்க உள்ளனர். இந்த புல்லட் ரயில் திட்டத்தை 2022ம் ஆண்டிற்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது
English Summary
The bullet train project in India is facing a challenge from Mango and sapota (the fruit popularly known as 'chiku') growers in Maharashtra who are backed by local politicians. The fruit growers are up in arms protesting against the proposed acquisition of their land for the bullet train project - unwilling to surrender their land without alternative employment guarantees.