மத்திய பட்ஜெட் : பாஜக – தெலுங்கு தேசம் மோதல் முற்றுகிறதா? ஞாயிறு தெரிய வரும்

Must read

டில்லி

ந்திர மாநிலத்தை புறக்கணித்துள்ளதால் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்ததாக தெலுங்கு தேசம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததை அடுத்து இருகட்சிகளிடேயே மோதல் முற்றி வருவதாக கூறப்படுகிறது

நேற்று பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.   நிதி நிலை அறிக்கையை  திமுக,  காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன    அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியும் இந்த அறிக்கை மிது அதிருப்தியாக உள்ளது.

இந்த வருட நிதிநிலை அறிக்கையில் ஆந்திராவுக்கு சிறப்பு நிதி தேவை என தெலுங்கு தேசம் கட்சி கோரியது.    மத்திய அரசு ரூ. 1000 கோடி சிறப்பு நிதி அளிக்கப்படும் என கூறியது.   ஆனால் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.   மேலும் ஆந்திர அரசு எதிர்பார்த்த எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை.    இது குறித்து நேற்று மாலை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருட்ன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்பு தெலுங்கு தேசம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்  இந்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டதால் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.    அதையொட்டி அரசியல் ஆர்வலர்கள் இரு கட்சியிடையேயான மோதல் முற்றி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திரபாபு நாயுடு தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.  அந்தக் கூட்டத்தில்  பாஜக உடன் உறவு தொடர்வதைப் பற்றி விவாதிக்க உள்ளார்.   அந்தக் கூட்டத்தில் விவாதித்த பின்  பாஜகவுடனான கூட்டணி தொடருமா அல்லது கூட்டணியை முறித்துக் கொள்வதா என்பது பற்றிய முடிவை நாயுடு அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article