பெண்ணின் ஹால்டிக்கெட்டில் நடிகையின் ஆபாச படம்; விஷமிகளின் விஷமத்தனம்

Must read

பாட்னா:

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வை எழுதும் ஒரு பெண்ணின் ஹால்டிக்கெட்டில் மேலாடை இல்லாத ஹாலிவுட் நடிகையின் புகைப்படத்தை ஓட்டி அனுப்பிய விவகாரம் தற்போது பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பீகார் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வு வரும் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது. இதற்கான அனுமதி அட்டை அப்பெண்ணுக்கு கமிஷன் சார்பில் அனுப்பப்பட்டது.
அதில் அந்த பெண்ணின் புகைப்படத்துக்கு பதிலாக மோலடை இல்லாத ஹாலிவுட் நடிகையின் ஆபாச புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதை கண்டு அப்பெண்ணும், அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர்.
அனுமதி அட்டையில் ஒட்டுவதற்காக பிரத்யேக புகைப்படத்தை விண்ணப்பத்தோடு அந்த பெண் அனுப்பிருந்தும் இந்த விஷமத்தனம் நடந்துள்ளது. இது அந்த பெண்ணை திட்டமிட்டே துன்புறுத்தும் வகையில் ஒட்டப்பட்டதா? அல்லது கேலி கூத்தாக இது நடந்துள்ளதா என தெரியவில்லை என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண்ணின் முதல் பெயர், ஹாலிவுட் நடிகையின் பெயரோடு ஆரம்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வளை தளங்களில் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article