இங்கிலாந்து: மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18  வருடம் சிறை

Must read

லண்டன் :

ங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்தவர் அஷ்வின் தாதியா (வயது 55). இவரது மனைவி கிரண் தாதியா (46). இவர்கள் இந்தியாவில் கடந்த 1988-ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டனர்.

இருவரும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் அந்நாட்டில் நாட்டில் லீ செஸ்டர் நகரில் ஒரே குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் தாயுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கிரண் தாதியா ஒரு அமைப்பில் சேர்ந்தார். அந்த அமைப்பின் உறுப்பினர்கள்,  எவருடனும் எவரும் எங்கும் சென்று வரலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அஷ்வினுக்கு தெரிய வந்தது. அவர், கிரணிடம் இது குறித்து  வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியபோது, ஆத்திரத்தில் அஷ்வின், தனது முன்னாள் மனைவி கிரணை கடுமையாக தாக்கினர். இதில் கிரண் மரணமடைந்துவிட்டார். அவரது உடலை வெட்டி ஒரு பெட்டியில் வைத்து அஷ்வின் வீசி விட்டார்.

பிறகு, ‘கால் சென்டர்’ஒன்றில் வேலைக்குச் சென்ற தன் மனைவியைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் செய்தார்.

காவல்துறை விசாரணையில், கிரண் உடல், பெட்டியில் வைத்து வீசப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து  அஷ்வின் மீது  கொலை வழக்கு பதியப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீதான கொலைக்குற்றச்சாட்டை மறுத்தார்.

ஆனாலும் கிரணின் உடலை வைத்த பெட்டியை அவர் தரதரவென இழுத்துச்சென்றது ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து  குற்றம் உறுதிசெய்யப்பட்டு,  18 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்ரம் உத்தரவிட்டது.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article