இந்தோனேசியா: விமான விபத்தில் 8 பேர் பலி…சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்

ஜகார்த்தா:

இந்தோனேசியா பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 12 வயது சிறுவன் உள்பட 9 பேர் இருந்தனர். ஒக்சில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த விமானம் திடீரென மாயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானம் பெகுனுங்கன் பிண்டாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 12 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான். இதை கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டனர். விமானத்தில் பயணம் செய்த இதர 8 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Boy survives eight killed in Indonesian plane crash, இந்தோனேசியா: விமான விபத்தில் 8 பேர் பலி...சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்
-=-