மெரிக்காவை சேர்ந்த ரோபோக்கள் தயாரிக்கும் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் புதிய ரக ரோபோ ஒன்றை தயாரித்துள்ளனர். அதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு வகையான ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், மனிதர்களை போலவே பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் ஓட்டல் ஒன்றில் உணவு பரிமாறும் வேலையில் ரோபோக்கள் உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சவூதி அரேபியா குடியுரிமை பெற்றுள்ள சோபியா என்ற ரோபோ, மனிதர்களை போலவே பேசியும், பழகியும் வருகிறது. இந்த ரோபோ சமீபத்தில், தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், பாஸ்டன் டைனமிக்ஸ் ஏற்கனவே  மனித வடிவிலான ரோபோக்கள் முதல் நான்கு கால்கள் உடைய ரோபோக்கள் வரை பல வித ரோபோக்களை உருவாக்கி ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பதிய வகையான  4 கால்கள் கொண்ட ரோபோ தயாரித்துள்ளது. மஞ்சள் நிறத்தில் காணப்படும்  இந்த ரோபோக்களை வீட்டு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் வகையில் தயாரித்துள்ளது. இந்த ரோபோக்களின்  பயன்பாடுகள் குறித்த வீடியோவை பாஸ்டன் நிறுவனம் யு டியூப் சேனலில்  வெளியிட்டு உள்ளது.

ந்த வீடியோவில், கதவுகள் மூடப்பட்டுள்ள ஒரு விட்டினுள் இரண்டு 4 கால்கள் கொண்ட மஞ்சள் நிற ரோபோக்கள் உள்ளன. பார்ப்பதற்கு பெரிய வகை நாய்கள் போல தோற்றமளிக்கும் இந்த ரோபோக்கள் பூட்டில் வீட்டில் இருந்து வெளியேற எண்ணி, கதவு பக்கம் வருகிறது. அப்போது கதவு மூடப்பட்டிருப்பதை பார்த்து,  கதவை திறக்க தன்னுடன் உள்ள மற்றொரு ரோபோவை அழைக்கிறது.

உடனே அந்த ரோபோ, கதவை திறக்கும் வகையில் அதற்கான ஹைடராலிக் டூலுடன் வந்து,  கதவு தாழிடப்பட்டிருந்த தாழ்ப்பாழை நீக்கி, கதவை  திறந்து, அடுத்த ரோபோ வெளியே செல்லும் வகையில் கதவை பிடித்து வைத்துக்கொண்டு உள்ளது. பின்னர் இரண்டு ரோபோக்களும் அழகாக நடந்து வீட்டை விட்டு வெளியேறுகிறது.

இதுபோன்ற ரோபோக்களையும், அதன் செயல்பாடுகளையும்  பார்க்கும்பொழுது, மனிதர்களுக்கு இணையாக…. இல்லையில்லை.. மனிதர்களை விட அதிக ஆற்றலுடனும், திறமையுடன் இதுபோன்ற ரோபோக்கள் பணி செய்ய இறங்கினால்,  இனி வரும் காலங்களில் மனிதர்களுளுக்கு  பணியே இல்லாத நிலை உருவாகி விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

நன்றி: பாஸ்டன் டைனமிக்ஸ்

அந்த வீடியோ…