புதுடெல்லி:
டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க் புளுடிக் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..

“இந்த வாரம் நாங்கள் மெட்டா வெரிஃபைட் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளோம். அரசின் ஆவணங்கள் மூலம் உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும், நீல நிற பேட்ஜைப் பெறவும், உங்கள் சமூக வலைதள கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பைப் பெறவும் சந்தா சேவையை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த புதிய அம்சம் தொடர்பான எங்களின் சேவைகள் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும். மெட்டா ஃவெரிபைடு தொடர்பாக சாதரன இணைய தளத்திற்கு மாதம் 992 ரூபாயும் (11.99 அமெரிக்க டாலர் ), iOS எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தளத்திற்கு மாதம் 1240 ரூபாயும் (14.99 அமெரிக்க டாலர்) வசூலிக்கபடும். இந்த வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறோம். விரைவில் பல நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.