பாஜக குடும்ப வங்கியில் கறுப்பு பணம் மாற்ற முயற்சி: பிரபல மும்பை டாக்டர்கள் மீது வழக்கு

Must read

டெல்லி:
மகாராஷ்டிராவில் பாஜக குடும்பத்தினர் நடத்தும் கூட்டுறவு வங்கியில் கறுப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றியதாக மும்பையை சேர்ந்த முன்னணி டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது முதல் கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் அல்லோலப்பட்டு வருகிறார்கள். தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக்க இடைத்தரகர்கள் மூலம் வங்கிகளில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வங்கி அதிகாரிகளுக்கும், இடைத்தரர்களுக்கும் பெரிய அளவில் கமிஷன் கிடைக்கிறது.

இவ்வாறு அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் தங்களது கறுப்பு பணத்தை மாற்றிவிட்டு, தற்போது வருமான வரித் துறை சோதனையில் சிக்கி தவிப்பதை காண முடிகிறது. இந்த வரிசையில் தற்போது மும்பையில் இரு முன்னணி டாக்டர்கள் சிக்கியுள்ளனர்.
மும்பையை சேர்ந்த பிரபல புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சுரேஷ் அத்வானி மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மூலம் கறுப்பு பணத்தை மாற்றியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர் பத்மபூஷன் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அவுரங்காபாத்தில் உள்ள சிஐஐஜிஎம்ஏ மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சுரேஷ் தகல்காரும் கறுப்பு பணம் மாற்ற முயன்ற வழக்கில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள வைத்தியநாத் நகர்புற கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான 11 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டதில், ரூ. 10 கோடி அளவுக்கு பழைய ரூ. 500, 1000 நோட்டுக்கள் சிக்கியது. வங்கி மேலாளர்கள் விபின்ஷா, சிரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பாஜ மூத்த தலைவரான கோபிநாத் முண்டே காரில் இருந்து ரூ. 10.10 கோடி கைப்பறறப்ப்டடது முதல் இந்த கூட்டுறவு வங்கியில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் செல்லாத ரூபாய் நோட்டுக்களாக ரூ. 25 கோடியை புதிய நோட்டுகளாக மாற்ற வங்கி அதிகாரிகள் மும்பையில் இருந்து அவுரங்காபாத்துக்கு சட்ட விரோதமாக கொண்டு சென்றது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த பணம் ஒரு வங்கியில் இருந்து அதே வங்கியின் மற்றொரு வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த முறைகேட்டில் பாஜ எம்.பி., மற்றும் மகாராஷ்டிரா அமைச்சரின் பங்கஜா முண்டேயின் தங்கை தான் இந்த வங்கியின் இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிட்டதக்கது. அதனால் இந்த முறைகேட்டில் பாஜகவிற்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

More articles

Latest article