ஜின்னாவுக்கு புகழாரம் சூட்டும் பாஜக பெண் எம் பி

க்னோ

ஜின்னா ஒரு மகா புருஷர் என பாஜக பெண் பாராளுமன்ற உறுப்பினர் கூறி உள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக பெண் பாராளுமன்ற உறுப்பினர் சாவித்திரி பாய் பூலே.   தலித் வகுப்பை சேர்ந்த  இவர்  கடந்த மாதம் லக்னோவில் தலித்துகள் நடத்திய பேரணியில் கலந்துக் கொண்டார்.  இந்திய அரசியலமைப்பை காப்போம் என நடைபெற்ற அந்தப் பேரணியில் இவர் கலந்துக் கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது.

சாவித்திரி பாய் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.   அப்போது அவர், “பாஜகவை சேர்ந்தவர்கள் அடிக்கடி அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.   சில வேளைகளில் சாதி வாரியான இட ஒதுக்கிட்டை ஒழிக்கப் போவதாக கூறுகின்றனர்.  இதையெல்லாம் பார்க்கும் அம்பேத்கார் அமைத்த அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் உள்ளதாக தோன்றுகிறது.

சமீபத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஜின்னாவின் புகைப்படம் திறக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன்.  ஜின்னா ஒரு மகா புருஷர் ஆவார்.   அது என்றுமே மாறாது.    அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பை அளித்துள்ளார். அதனால் அவரது படத்தை திறப்பதில் தவறே இல்லை” என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அவர் கீழே உள்ள நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார்.

1.      பிரதமர் மோடியின் நான்காண்டு கால ஆட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?

2.      நீங்கள் பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு விலகி ஏன் பாஜகவில் இணைந்தீர்கள் ?

3.      ஜின்னா மகா புருஷர் எனக் கூறும் நீங்கள் நாடெங்கும் அவர் படத்தை திறக்க ஆதரவு அளிப்பீர்களா?

4.      பிரதமர் மோடியின் தலைமையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP MP Savithri said Jinnah is a Great man
-=-