வீர மரணம் அடைந்த ராணுவத்தினரை மீண்டும் அவமானப்படுத்திய உ.பி. பாஜக எம்.பி..

லக்னோ:

வீர மரணம் அடைந்த ராணுவத்தினரை மீண்டும் அவமானப்படுத்தி உள்ளார் உ.பி. மாநில பாஜக எம்.பி.யான நேபால் சிங். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் புல்வானா பகுதியில் இருந்த இந்திய பாதுகாப்பு படையினர் முகாம்மீது   பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சில ராணுவ வீரர்கள் பலியாகினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நேபால் சிங்,

உ.பி. மாநில பா.ஜ. கட்சி எம்.பி. நேபால்சிங்

“ராணுவம் என்றால் வீரர்கள் மரணம் அடைவது தினசரி நடப்பது தான்.   சண்டையின் போது ராணுவ வீரர்கள் மரணம் அடைவதே இல்லை என்னும் நிலை எந்த நாட்டில் உள்ளது?   கிராமத்தில்  ஒருவருக்கொருவர் நடக்கும் சண்டைகள் கூட படுகாயத்திலும் மரணத்திலும் முடிகிறது.    இது வரை துப்பாக்கிக் குண்டுகளை சமாதானப்படுத்தி ராணுவ வீரர்களை தாக்கமல் செய்யக்கூடிய ஒரு கருவி கண்டுபிடிக்கப்படவில்லை” என பதிலளித்தார்

இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பின்னர் அதுகுறித்து மன்னிப்பு கோரி யிருந்தார்.

இந்த நிலையில், தற்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு பேசிய நேபால் சிங் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

அவர் பேசும்போது,  “இராணுவத்தில் பணியாற்றும் ஜவான்கள் இறக்கத்தான் நேரிடும். இராணுவம் இறக்காத நாடு ஒன்றும் இல்லை. இறப்பதில் இருந்து  தடுக்கக்கூடிய ஒரு சாதனம் இருந்தால் என்னிடம் கூறுங்கள் “என்றார்.

பாஜ எம்.பி.யின் இந்த சர்ச்சை பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்க ளில் அவரது கருத்துக்கு கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP MP Nepal Singh insults martyrdom, says “Jawan’s in the army will obviously die, வீர மரணம் அடைந்த ராணுவத்தினரை மீண்டும் அவமானப்படுத்திய உ.பி. பாஜக எம்.பி..
-=-