குல்தீப் சிங்

ன்னாவ், உத்திரப் பிரதேசம்

ரு மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து அவர் தந்தையை அடித்துக் கொன்றதாக பாஜக வின் சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உன்னாவ் தொகுதியின் பாஜக வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார்.  இவருடைய சகோதரர் அதுல் சிங் செங்கார்.   உன்னாவ் தொகுதியை சேர்ந்த ஒரு மைனர் பெண் லக்னோவில் உள்ள உ.பி, முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.   அவரை தடுத்த பாதுகாவலர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அங்கு அந்தப்பெண், “கடந்த வருடம் ஜூன் மாதம் 17ஆம் தேதி அன்று குல்தீப் சிங் என்னை கூட்டு பலாத்காரம் செய்தார்.    இது குறித்து நான் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.    மேலும் குல்தீப் சிங்கின் சகோதரர் அதுல் சிங் என் தந்தையை தனது ஆட்களுடன் சேர்ந்து தாக்கினார்.   எனது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்”  என தெரிவித்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் தந்தை  நேற்றுமரணம் அடைந்தார்.   அதை ஒட்டி குல்தீப் சிங்கின் சகோதரர் அதுல் சிங் உட்ப

ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மேலும் அந்தப் பெண்ணின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் ஆறு பேர் பணியிடை நீகாம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங், “இவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள் ஆகும்.   எனது வளர்ச்சியும் மக்களிடம் உள்ள செல்வாக்கும் பலருக்கு பொறாமையை உண்டாக்கி உள்ளது.   அதனால் அவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த பொய்ப் புகார்கள் கூறபட்டுள்ளன.   முழுக்க முழுக்க எனது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கவே இவ்வாறு நடைபெற்றுள்ளது”  என தெரிவித்துள்ளார்.