பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் எஸ்ஐ தேர்வில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ரூ. 210 கோடி  மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படும் இந்த புகாரில்,  குல்பர்கா பகுதி பாஜக மகளிர் அணி தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஒப்பந்த ஊழல் தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகிய நிலையில், தற்போது காவல்துறையில்  முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலீஸ் பணி நியமன விவகாரத்தில் ரூ.210 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் அமைச்சர்களுக்கும், பாஜகவினருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  குல்பர்கா பிஜேபி தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை மாநில அமைச்சர் அரக ஞானேந்திரா உறுதிப்படுத்தி உள்ளதுடன், குல்பர்கா பிஜேபி தலைவர் திவ்யா  கணவர் ராஜேஷ் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இவர் அந்த பகுதியில் ஞானஜோதி ஆங்கிலப் பள்ளி நமடத்தி வருவதாகவும், அவரது பள்ளி வளாகத்தில்தான்  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வுகள் நடைபெற்றது. அப்போது பல  முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் சிஐடி டிஒய்எஸ்பி சங்கர கவுடா தலைமையிலான குழுவினர் நேற்று சோதனை நடத்தினர்.

திவ்யா அஸ்கரியின் ஞான ஜோதி ஆங்கில வழிப் பள்ளியில் பிஎஸ்ஐ தேர்வு நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.  இதையடுத்து திவ்யா இல்லத்தின் மீது சிஐடி குழுவினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து தகவ்ல அறிந்த தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது அவரைதேடும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து அவரது கணவர் ராஜேஷ், சிஐடியால் கைது செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக, 4 விண்ணப்பதாரர்கள்,   மூன்று மேற்பார்வையாளர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தலைமறைவாக உள்ள திவ்யா முன்பு பாஜகவின் மகளிர் மோர்ச்சா மாவட்டத் தலைவராக இருந்தார்.  அவர் தற்போது திஷா கமிட்டி மற்றும் கர்நாடக நர்சிங் கவுன்சில் உறுப்பினராகவும், கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.