லக்னோ:
உ.பி சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்னைக்கு பிறகு அகிலேஷ் யாதவ் செல்வாக்கு வளர்ந்திருப்பதை கண்டு பாஜ அதிர்ச்சியடைந்துள்ளது.

உ.பி. சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அங்கு ஆளும் சமாஜ்வாடி கட்சியில் கடந்த சில காலமாக உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது. கட்சியின் தலைவரும் முலாயம் சிங்குக்கும், முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது.

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங்கையும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சிவ்பாலையும் நீக்கி அகிலேஷ் யாதம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அகிலேஷின் இந்த நடவடிக்கையையும், அவரது வளர்ச்சியையும் கண்டு முலாயம் சிங் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தற்போது கட்சியின சைக்கிள் சின்னத்துக்கு இருவரும் சொந்தம் கொண்டாடி தேர்தல் கமிஷனை நாடி வருகின்றனர். இவர்களுக்கு இடையே நடந்த இந்த மோதல் தற்போது பாஜவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜ. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சமாஜ்வாடி கட்சியின் செல்வாக்கு உ.பி.யில் இறங்கு முகமாக இருந்து வந்தது. இதனால் மாயாவதியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தங்களுக்கும் இடையே தான் நேரடி போட்டி என்று இருந்தது. சமாஜ்வாடி கட்சி வலுவிழந்து இருப்பதால் முஸ்லிம் வாக்குகள் பகுஜன் சமாஜ் வாடி கட்சிக்கு விழும். முஸ்லிம் ஓட்டுக்கள் சிதறுவது தங்களுக்கு ச £தகமாக அமையும் என்று எண்ணியிருந்தோம்.
ஆனால் இந்த நிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. அகலேஷ் யாதவ் தற்போது தனது சொந்த க £லில் தனிப் பெரும் தலைவராக உருவெடுத்துவிட்டார். அகிலேஷ் மீது தனிப்பட்ட முறையில் எந்த குற்ற ச்சாட்டுக்களும் கூற முடியாது. அவருக்கு எதிராக சதி நடந்திருப்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த வாரம் வரை யாதவ இன வாக்குகளை ஈர்க்கும் சக்தி சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் சிவ்பால் யாதவ் வசம் இருப்பதாக தெரிந்தது.
ஆனால் இவர் நீண்ட நாட்களுக்கு இவ்வாறு இருக்க முடியாது என்பதை பாஜ உணர்ந்துள்ளது. சிவ்பால் மக்கள் தலைவர் இல்லை. அவர் முலாயமில் துதிபாடி என்பது தற்பாது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கட்சி உடைவதை முலாயம் விரும்பவில்லை. சிவ்பாலுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்து உ.பி. அரசியலில் இருந்து அவரை வெளியேற்றுவார் என்றே தோன்றுகிறது.
எதிர்தரப்பில் அகிலேஷ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் சமயத்தில், வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் முதல்வர் வேட்பாளர் இல்லாமல் பாஜ தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.