திரைவிமர்சனம் :பில்லா பாண்டி

தீபாவளிக்கு அஜீத் நடித்த படம் எதுவும் வெளியாகாத நிலையில், அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக வந்திருக்கிறது பில்லா பாண்டி. நாயகனாக வரும் ஆர்.கே.சுரேஷ், அதி  தீவிர அஜீத் ரசிகராக வருகிறார். தவிர படத்தில் அஜீத்தே நடித்திருப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி வடுகிறார்கள்.

அணைத்’தல’ப்பட்டி அஜித் ரசிகர் மன்றத் தலைவர் பில்லா பாண்டியாக (ஆர்.கே.சுரேஷ்) பொறுப்பு வகிக்கிறார். அதான் சொன்னோமே.. அதி தீவிர ரசிகர் என்று., அஜித்தின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்து வணங்கும் அளவுக்கு தல மேல் பக்தி அவருக்கு.

அஜித் புகழ் பாடிய நேரம் போக, வயிற்றுப் பிழைப்புக்காக கட்டிட தொழில் செய்து வருகிறார் பில்லா பாண்டி அவருக்கு தனது மாமா மாரிமுத்துவின் மகள் சாந்தினி மீது  லவ்வோ லவ்.  சாந்தினிக்கும் அப்படித்தான்.  பரஸ்பரம் அத்தனை  ஈர்ப்பாக இருக்கிறார்கள். ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.

ஆனால் இவர்களது காதலை வெறுக்கிறார் மாமா மாரிமுத்துக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்கிறார்  பில்லா பாண்டி.

இதற்கிடையே இந்துஜாவுக்கும் பில்லா பாண்டி மீது ஒருதலை காதல். இந்த விவகாரம், இந்துஜாவின் அப்பாவின் கவனத்துக்கு வருகிறது. ஆத்திரமாகிறார். பில்லா, பாண்டியை அடித்து உதைத்து விரட்டுகிறார்.

இந்த விஷயம் வெளியில் அனைவருக்கும் தெரியவர.. , பில்லா பாண்டி – சாந்தினி இடையேயான காதலில் பிரச்சினை ஏற்படுகிறது.

இறுதியில் பில்லா பாண்டி யாருடன் இணைந்தார்  என்பதுதான் மீதிக்கதை.

இந்தப்படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், அஜித்தை முன்னிலைப் படுத்தி படத்தை காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அது அளவுக்கு மீறி.. அதாவது ஓவர் அஜீத் புராணம்.. ரசிகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்துகிறது.

இந்துஜாவி இயல்பாக நடித்திருக்கிறார். கவுரவ வேடத்தில் வரும்  சூரியும், விதார்த்தும் ரசிக்கவைக்கிறார்கள்.

இளையவன் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. வீராகுமாரின் ஒளிப்பதிவு பாந்தம்.

இடைவேளை வரை இழுவைதான். ஆனால் அதன் பிறகு ஓரளவு சுதாரித்திருக்கிறார்கள். ஆகவே பரவாயில்லை. ரகம்.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: billa pandi film review
-=-