பீகார்:
பீகார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், 2வது முறையாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த 9-ஆம் தேதி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து , அன்றைய தினமே மாலை கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பின்ன்ர, அங்கு அமைந்துள்ள ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியான மகாபந்தன் கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து, மகா கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதீஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தன. கூட்டணியின் தலைவராகவும் நிதீஷ் குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்ன்ர, கூட்டணி தலைவர்களுடன் வந்து கவர்னரை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதையடுத்து இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பீகார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.