ஒடிசா: ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ்  ( பிஜு ஜனதா தளம் கட்சி (பிஜேடி)  நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, மர்ம நபரால் சுடப்பட்டார். அவரை சுட்டவர் காவலர் என தெரிய வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 

ஒடிசா மாநிலத்தின்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்  நபா கிசோர்.  அங்குள்ள ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள காந்தி சௌக்கில் தாஸ் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்போது, அவர் காரில் இருந்து இறங்கும்போது மதியம் 12.30 மணியளவில்  மர்ம நபர் ஒருவர் அவர்மீது துப்பாக்கி சூட நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இடது மார்பில் புல்லட் காயம் ஏற்பட்டது, இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர்  மேல் சிகிச்சைக்காக அவர் விமானம் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்த விசாரணையின்போது, அமைச்சரை சுட்டவர் ஒரு  போலீஸ்காரர் என்பது தெரிய வந்தது.  அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும்,அவருக்கு இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்றார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,   புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் நபா கிசோர் தாஸ்   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுட்டதால், துப்பாக்கி தோட்டா ஒன்று அவரது உடலுக்குள் நுழைந்து வெளியேறியதால், இதயம் மற்றும் இடது நுரையீரல் ஆகியவற்றில் அவருக்கு  பெரும் சேதம் ஏற்பட்டிருந்ததாகவும், அதிக ரத்தம் வெளியேறி உள்ளதாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவமனை தெரிவித்து உள்ளது. டாக்டர் தேபாஷிஷ் நாயக் தலைமையிலான டாக்டர்கள் குழு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நபா தாஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது, முதல்வர் நவீன் பட்நாயக், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நபா தாஸ், கடந்த 2019 தேர்தலில் பிஜேடி சார்பில் வெற்றி பெற்றவர். அதற்கு முன், அவர் காங்கிரஸில் இருந்தார் மற்றும் கட்சியின் செயல் தலைவராக பணியாற்றியுள்ளார்.