‘பாரத ரத்னா விருது’: கருணாநிதிக்கு வழங்க கோரி பாராளுமன்றத்தில் திமுக கோரிக்கை

டில்லி:

ருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு  திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் மரணம் அடைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று  பாராளுமன்றத்தில் திமுக எம்பி  திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கடந்த  7-ம் தேதி மாலை 6.10 மணி அளவில் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் கடந்த  8ந்தேதி மாலை   நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று  மாநிலங்களவையில்  பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திமுக எம்.பி.யின்  கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட  பல  கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
English Summary
DMK's demand for Parliament to grant 'Bharat Ratna Award' to dmk chief Karunanidhi