இந்தியாவை விட்டு வெளியேறும் முன் அருண்ஜெட்லியை சந்தித்தேன்: விஜய் மல்லையா ஓப்பன் டாக்

டில்லி:

த்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்த பிறகே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றேன் என்று தலைமறைவு தொழிலதிபர் விஜய் மல்லையா கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று லண்டன் நீதி மன்றத்தில் விஜய்மல்லையா தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக தெரிவித்தார்.

எஸ்.பி.ஐ. உள்பட பல்வேறு  வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரது  கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வைத்து  வாங்கிய கடன் தொகை 6,963 கோடி ஆகும்.   இந்த கடனை வசூலிக்க 17 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு போராடி வருகின்றன.

இந்த நிலையில், விஜய்மல்லையா  தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க  எஸ்.பி.ஐ. தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு உச்சநீதி மன்றத்தில் கோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 8ந்தேதி வழக்கு தொடர்ந்தது.  இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த நாளை (மார்ச் 0, 2016) பிற்பகல் விசாரணைக்கு வர இருந்த நிலையில், விஜய் மல்லையா தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஏற்கனவே அவர் வெளிநாடு தப்பி விட்டதாக கூறப்பட்டது. அவர் வெளிநாடு செல்ல பாஜ அரசு துணை போனதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில், லண்டனில் குடியுரிமை பெற்று வசித்து வரும் விஜய் மல்லையாவை,  நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், விஜய் மல்லையாவை மும்பை சிறையில் அடைக்கப்பட உள்ளதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, விஜய் மல்லையாவை அடைக்கவுள்ள சிறையின் வீடியோவை சமர்ப்பிக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து வீடியோ காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து,  நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தான்  நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாகவும், ஆனால் அந்த விவரங்களை வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விஜய் மல்லையா வெளிநாடு தப்பிச் சென்றது மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தெரியும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதை விஜய் மல்லையா  தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Before I left India, I met Arun Jaitley: Vijay Mallya Open talk at london, இந்தியாவை விட்டு வெளியேறும் அறிவாளிகள்!
-=-