மதுரை:

மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது,.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது, மாட்டிறைச்சி விற்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுக்க தடை செய்வதாக அறிவித்தது.

இந்த சட்டதிருத்தத்துக்கு நாடு முழுவதும் பொதுமக்களி டையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தனி மனித சுதந்திரத்தில் மத்தியஅரசு தலையிடுவதாக கருத்து தெரிவிக்கப்பட்டு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க  கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறி உள்ளது.

மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.