ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி

Must read

புதுடெல்லி:
பிஎல்லில் எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாமல் போனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசியி தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா பயோ பபுளில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்தும் கூட கொரோனா பரவியது. இதையடுத்து ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு திரும்பிவருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் 8 பேர் இங்கிலாந்திற்கு சென்றுவிட்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை சேர்ந்த வீரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களும் விரைவில் கிளம்பிவிடுவார்கள்.

ஒரு சீசனில் மொத்தம் 60 போட்டிகள். 56 லீக் போட்டிகள். 3 பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

செப்டம்பரில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை இந்தியா முடிக்கிறது. அதன்பின்னர் அக்டோபரில் டி20 உலக கோப்பை நடக்கிறது. அதற்கிடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் அது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. ஒருவேளை ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போனால், ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, அனைத்து கிரிக்கெட் வாரியங்களுடனும் ஆலோசிக்க வேண்டும். டி20 உலக கோப்பைக்கு முன் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை அப்படி முடியாவிட்டால், ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article