டில்லி :

ந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுக்க சிறந்த பயிற்சியாளர்கள் தேவை என்ற இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நடப்பு  உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிவாகை சூடும் என மிகவும் எதிர்பார்க்கப் பட்ட  நிலையில், அரையிறுதியுடன் இந்திய அணி தன் பயணத்தை முடித்துக் கொண்டது. இதற்கு காரணமாக அணி வீரர்களுக்கு  இடையே உள்ள மோதல், கருத்து வேற்றுமை என்றும், நிர்வாக ரீதியில் எடுக்கப்பட்ட சில தவறான முடிவுகள், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் காரணம் என்று என்று பல குற்றம் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு  வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கிரிக்கெட்டு அணிக்கு பயிற்சி கொடுக்க பயிற்சியாளர்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, மூத்த இந்திய ஆண்கள் அணிக்கான தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சி யாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், உடல் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் மற்றும் நிர்வாக மேலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

உலக கோப்பை அரை இறுதி போட்டியின்போது, தோனியை  எப்போதும் போல 4வது ஆட்டக் காரராக இறங்க விடாமல், 7வது ஆட்டக்காரராக களமிறக்கியதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றும், இதற்க காரணம் ரவி சாஸ்திரி என்று பலரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் தலைமை பயிற்சியாளர் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.