டாக்கா:
பங்ளாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான குவாசிம் அலி, போர்க்குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
பங்களாதேஷ் நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்று  ஐமாத்- இ- இஸ்லாமி . இதன் தலைவராக இருந்தவர் குவாசிம் அலி.   பாகிஸ்தான் நாட்டிலிருந்து பங்ளாதேஷ் விடுதலை போராட்டம் நடத்தியத்தியது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் புரிந்து பங்களாதேஷூக்கு விடுதலை பெற்றுத்தந்தது இந்தியா.
இந்த போர் சமயத்தில் குவாசிம் அலி, பாகிஸ்தானுக்கு ஆதரவா செயல்பட்டு பல்வேறு கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சா்ட்டப்பட்டது. இது குறித்த விசாரணையில் குவாசிம் அலி குற்றவாளி என அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அவர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
article
இதையடுத்து காசிம்பூர் மத்திய சிறையில் குவாசிம் அலி அடைக்கப்பட்டார்.
அந்நாட்டின் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தால், தூக்கு தண்டனை நிறுத்தப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால்,  ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர விரும்பவில்லை என அவர் அறிவித்தார்.
இதையடுத்து  குவாசில் அலி தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு  10 மணியளவில் குவாசிம் அலி உறவினர்கள் 22 பேர் சிறைக்கு வந்து  அவரை சந்தித்துச் சென்றனர்.
இந்நிலையில், டாக்காவுக்கு அருகே உள்ள கஷிம்பூர் மத்திய சிறையில் இரவு 10.30 மணியளவில் குவாசில் அலி தூக்கில் இடப்பட்டார்.
இதை அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுசமன் கான் தெரிவித்தார்.