பங்களாதேஷ்:
புத்தாண்டில் இருந்து உள்நாட்டில் இருந்து செயல்படும் 500-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க பங்ளாதேஷ் அரசு முடிவு செய்துள்ளது.
 

இது தொடர்பான தகவல்களை அந்நாட்டின் தொலைத்தொடர்பு துறை நிறுவனம் அனைத்து அதிகாரிகள் நிலைகளிலும் கொண்டு சேர்த்துள்ளது.
அந்நாட்டின் தொலைத்தொடர்பு அமைச்சர் கூறுகையில், தற்பொழுது முதற்கட்டமாக 500 இணையதளங்களை முடக்க முடிவு செய்துள்ளோம். அந்த தளங்கள் அனைத்தும் உள்நாட்டில் இருந்து செயல்படக்கூடியது. இது தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி உள்ளோம்.
மேலும், 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதனை காணும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். 70 முதல் 80 சதவீத ஆபாச இணையதளங்கள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றது.
முழுவதுமாக அனைத்து ஆபாச தளங்களையும் மூடுவதற்கு அரசு விரும்பினாலும், முதற்கட்டமாக 80 சதவீத தளங்களை மட்டும், தற்பொழுது மூட முடிவெடுத்து உள்ளது என்றார்.