ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி நடித்த பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆவதை அடுத்து அதன் டிரெய்லர் இன்று வெளியானது.

லோட்டஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த் தாயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாபா.

மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்தப் படம் கவுண்டமணி-யின் கவுண்டர்களால் அதகளப்பட்டது.

2002 ம் ஆண்டு வெளியான பாபா ரஜினி ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை என்றாலும் 20 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் ஆவதை அடுத்து தனது மனதுக்கு நிறைவான படம் என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாபா படம் முதலில் ரிலீசானபோது படத்தில் ரஜினி சிகரெட் பிடிப்பது இளைஞர்களை சீரழிப்பதாக கூறி திரையரங்குகள் முற்றுகை இடப்பட்டது.

தற்போது ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வரமாக வரவிருக்கும் இந்தப் படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரஜினிகாந்த் பிறந்தநாளில் பாபா ரீ-ரிலீஸ் – அரசியல் ரீ என்ட்ரிக்கு ஆழம் பார்க்கிறாரா சூப்பர் ஸ்டார் ?