பாகுபலி வசூல் பிரமிப்பு உண்மையா?

Must read

 

திரைத்துறை பிரமுகர் ரவிநாக் அவர்களின் முகநூல்  பதிவு:

பாகுபலி 1000 கோடியை டச் பண்ணிடிச்சுனு போனவாரம் தகவல் அவ்ந்த உடனே எப்படி எம்புட்டு காசுயா இந்த பட பிஸினஸ்லனு அவர் அவர் வசதிக்கேற்ப கற்பனை குதிரையை தட்டி விட்ட சமயத்தில் சென்னை உரிமை எடுத்த அபிராமி ராமனாதன் அவர்கள் வெளியிட்ட சென்னை கலெக்ஷன் அவர் ஷேர் வெறும் 2.75 கோடிகள் மட்டுமே…… இது எப்படினு கேட்டா சிம்பிள் கேல்குலேஷன்………………

10 கோடிக்கு மினிமம் கேரன்டிக்கு படத்தை சென்னை போன்ற ஒரு ஏரியாவுக்கு வாங்கினால், அதை வினியோகம் செய்யும் போது ஒரு கோடி கலெக்ஷன்ன்னா அதில் 30% வரி போய்விடும். மிச்சம் 70 லட்சம். அதில் தியேட்டர் 60 % வருமானத்தை எடுத்து கொள்ளும். அதாவது 70 லட்சத்தில் 60% 42 லட்சம். மிச்சம் இருப்பது 28 லட்சங்கள். இதில் டிஸ்ட்ரிபியூஷன் காஸ்ட் 20% ( இதில் விளம்பரம் + போஸ்டர் + ரெப் + பிரின்ட் காஸ்ட் + எக்ஸ்ட்ரா எக்ஸ் எக்ஸ்ட்ரா). எஞ்சி இருப்பது எத்தனை ரூவாய்கள் தெரியுமா? 8 லட்சம்…. இது தான் ஒரு வினியோகஸ்தரின் வருமானம்.

1 கோடிக்கு வரவில் 8 லட்சம் ரிட்டர்ன் ஆஃப் ரெவ்னியுனா 10 கோடி எடுக்க எம்புட்டு கலெக்க்ஷன்ன்னு நீங்களே கேல்குலேட்டராயிடுங்க.

இப்படிதான் கபாலி வெற்றி இந்திய வரலாற்றில் முதன் முறையாகனு அடிச்சு விட்ட அத்தனை காபராக்களும் கடைசியில் டாபராக்களாகி தாணுவின் மீது பல வினியோகஸ்தர் குற்றச்சாட்டு வாசித்திருக்கும் கதை இந்த வகையில் தான்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article