ஜெ., வாழ்க்கை வரலாறு ’தி ஐயன் லேடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தி ஐயன் லேடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது இரண்டாவது நினைவுதினமான இன்று வெளியிடப்பட்டுள்ளது.


உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.  75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி 2016-ஆம் வருடம் டிசம்பர் ஐந்தாம் தேதி அவர் காலமானார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இவரது மறைவுக்கு பிறகு இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல இயக்குநர்கள் தயாராகி வருகிறார்கள்.  இயக்குநர் மிஷ்கினுடன் இணை இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  இந்தி என நான்கு மொழிகளில் இயக்க இருக்கிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24, 2019 ல் படப்பிடிப்பை துவங்க இருப்பதாக  ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் தி ஐயன் லேடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ப்ரியதர்ஷினி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகை நித்யா மேனன், ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

#ayalalitha # biography #theironlady #movie #firstlook #released

 

 

Tags: ayalalitha-biography- the iron lady movie-first look released, ஜெ., வாழ்க்கை வரலாறு ’தி ஐயன் லேடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு