ண்டன்

ட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்கள் லண்டன் சாலையில் சோதனை செய்யப்பட்டு வெற்றி அடைந்துள்ளது.

தற்போது ஓட்டுனர் இல்லாமல் தானே இயங்கும் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.   இந்த வாகனங்கள் நடைமுறையில் எந்த சிக்கலும், விபத்தும் இன்றி செல்லும் என்பதற்கு பல சோதனைகள் தொழிற்சாலையின் உள்ளே செய்யப்பட்டு வருகின்றன.  டிம் ஆர்மிடேஜ் என்னும் இந்த சோதனை அதிகாரி லண்டன் நகர தெருக்களில் சோதனை ஓட்டத்தை நிகழ்த்தி உள்ளார்.

ஜாகுவார் லாண்ட் ரோவர்,  ஃபோர்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் உருவாக்கிய மூன்று வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.  சோதனியில் இங்கிலாந்து சாலைகளில் இந்த வாகனங்கள் சிறப்பாக சென்றுள்ளன.   டிராஃபிக் சிக்னல்கள், அவசர வாகனங்களுக்கு வழி விடுதல்,  அடுத்து வரும் வாகனத்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஓடுதல் ஆகிய சோதனைகளில் இந்த வாகனங்கள் வெற்றி பெற்றுள்ளன.

இந்த வாகனம் தானியங்கி வாகனமாக இருப்பினும்,  அவசர காலத்துக்கு வாகனங்களை இயக்க உள்ளே ஒரு அனுபவம் மிக்க ஓட்டுனர் அமர்த்தப் பட்டிருந்தார்.   ஆனால் இந்த வாகனங்கள் அந்த ஓட்டுனரின் உதவி இல்லாமலேயே பயணம் செய்தன.   வண்டிகள் எந்த ஒரு வண்டியுடனும் மோதாமல் சென்றுள்ளன.  இந்த வாகனங்கள் அடுத்த வருடம் வரை சோதனையில் ஈடுபடுத்தப் பட உள்ளன.   இந்த சோதனை முழு வெற்றி அடைந்தால் ஆடோமேஷன் துறையில் பல வேலை வாய்ப்புகள் உண்டாகும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் இது போன்ற வாகனங்கள் இயக்கக்கூடாது எனவும் இதனால் பல ஓட்டுனர்கள் பணிகளை இழப்பார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.