புதுடெல்லி:
ஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், நான்குநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர், அகமதாபாத்திலும், மும்பையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

நேற்று மாலை மும்பையில் டப்பாவாலாக்களை சந்தித்து உரையாடிய அவர், விக்ராந்த் போர்க்கப்பலைப் பார்வையிட்டார்.

இன்று அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் அதுகுறித்தும் இருவரும் பேச்சு நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.