கோவை: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த  கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து தொழில்களிலும் பணியாட்களாக வடமாநிலத்தவர்கள் சேர்ந்துள்ள நிலையில், அவர்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கொடி பிடித்து வருகின்றன. இது சமீபகாலமாக சர்ச்சையான நிலையில், வடமாநில அரசுகளின் எச்சரிக்கை மற்றும் வலியுறுத்தல்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், காவல்துறையும், வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. எந்த இந்தியை போடா என  எதிர்ப்பதாக கூறி அரசியல் செய்து வரும் அரசியல் கட்சிகள், இன்று இந்தியிலேயே வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு தருவதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. மேலும் வடமாநிலத்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும்படி  உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கோவையில் நேற்று வடமாநில வாலிபர்கள் சிலர் தாக்கப்பட்டதாக புகார் வந்ததது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோவை பகுதியில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில்,தங்கி இருந்துதொழிலாளியாக வேலை பார்த்து வரும், வட மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் சியாமல் கட்டுவா, தன்மைய் ஜனா, ஜகாத் ஆகிய 3 பேரும், அந்த பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் அவர்கள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி  அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள்,  காந்திபார்க் அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்த வடமாநில வாலிபர்களான மோனா, ஷேக் தவான் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வட மாநில வாலிபர்களை தாக்கியது. செட்டிவீதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (19), பிரகாஷ் (20) கல்லூரி மாணவர் பிரகதீஸ் (21) வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

ஆனால், அவர்கள் குடிபோதையில் தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் தங்களை மன்னித்துவிடும்படி கோடியதாகவும் காவல்துறையின்ர் தெரிவித்து உள்ளனர். இருந்தாலும், அவர்கள் 4 பேரையும்,    கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.