கவுகாத்தி:

சாம் மாநிலத்தில் இன்று தேசிய குடிமக்கள் இறுதிப் பட்டியல் வெளியான நிலையில், அதில் 19 லட்சம் பேரின்  பெயர்கள் விடுபட்டுள்ளது. இதில் இரண்டு முறை எம்எல்ஏ ஆன முன்னாள் எம்எல்ஏ உள்பட 2 எம்எல்ஏக்கள் பெயர் உள்பட முன்னாள் ராணுவத்தினர், சிஆர்பிஎப் அதிகாரிகளின் பெயர்களும் விடுபட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில்19 லட்சம் பேர் பெயர் சேர்க்கப்படாத நிலையில்,  அங்கு இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவரின் பெயரும் விடுபட்டுள்ளது

அசாம் மாநிலத்தின் கட்டிகோர் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் ஏஐயுடிஎப் (AIUDF) எம்எல்ஏ அட்டார் ரஹ்மான் மஜர்புயான் பெயர் இடம்பெற வில்லை.

அதுபோல,  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) சட்டமன்ற உறுப்பினர் தென் அபயபுரி அனந்த குமார் மாலோ மற்றும் அவரது மகனின் பெயரும் இறுதி பட்டியலில் இருந்து  விலக்கப்பட்டுள்ளன. இதுவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தல்கான் காங்கிரஸ் எம்.எல்.ஏ இலியாஸ் அலியின் மகளின் பெயரும் இறுதி பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான பட்டியலில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த முறை வெளியான வரைவு பட்டியலில் உள்ள பலரது பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் பெயர் சேர்க்கப்பட்டும், பலரது பெயர் நீக்கப்பட்டும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குழப்பமான இந்த இறுதி பட்டியலால் மக்கள் மேலும் கோபமடைந்து உள்ளனர். அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.