ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: ரோகித் ஷர்மா தலைமையிலான அணி அறிவிப்பு – விராட் கோலிக்கு ஓய்வு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி பங்கேற்க உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

asia-cup

14வது ஆசியர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உட்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தனர். இதில் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பி உள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ் டோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஒய் சாகல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், கலீல் அகமது

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-