புதுடெல்லி:
ப்துல்லா ஷாஹித் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது அமர்வின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா ஷாஹித் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்காக இந்தியாவில் உள்ளார்.

இந்த பயணத்தின் போது, மாலத்தீவின் வெளியுறவு அமைச்சராக இருக்கும் ஷாஹித், வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார். வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லாவும் அமைச்சருக்கு விருந்தளிப்பார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.