வட மாநிலங்களில் கடுங்குளிர்: விநாயகருக்கும் ஸ்வெட்டர் போர்த்தி வழிபாடு

டில்லி :

வட மாநிலங்களில் நிலவி வரும் வரலாறு காணாத கடுங்குளிர் காரணமாக,  பல கோவில்களில் கடவுள் சிலைகளுக்கும் ஸ்வெட்டர் அணிவித்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட குளிர் அதிகரித்து காணப்படுகிறது. டில்லி யில் நேற்றைய குளிர்  6.2 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலை நீடித்தது.

அதுபோல உ.பி., பஞ்சாப், அரியானா போன்ற  வட மாநிலங்களிலும் கடுங்குளிர் வாட்டி வருகிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப் பட்டும், போக்குவரத்துகளும் முடக்கி உள்ளன.

இந்த நிலையில், உ.பி.யில் உள்ள பல்வேறு கோவில்களில், அங்குள்ள சாமி சிலைகளுக்கும் ஸ்வெட்டர் மற்றும் கம்பளி போர்த்தப்பட்டு பூஜை புனஸ் காரங்கள் நடைபெற்று வருகின்றன.

புனேயில் உள்ள புகழ்பெற்ற சரஸ்பாக் கணபதி கோயிலின் அறங்காவலர்கள், அங்குள்ள  சித்தி விநாயகர்  சிலையை சூடாக வைத்திருக்கும் பொருட்டு,  ஒரு கம்பளி ஸ்வெட்டரை அணிவித்து உள்ளனர். கணேசர் சிலைக்கு கம்பளி குல்லாவும் அணிவித்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அதுபோல அந்த கோவிலில் உள்ள  ஸ்ரீதேவனேஷ்வர் சன்னிதானம், பார்வதி உள்பட அனைத்து சிலைகளும் கம்பளியால் போர்த்தப்பபட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

புகழ்பெற்ற இந்த சித்தி விநாயகம் ஆலயமானது  1784 ஆம் ஆண்டில் ஏரியின்  நடுவில் ஒரு தீவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துக்கு தினசரி 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தி, கணேசரின் அருளை பெற்றுச் செல்கின்றனர்.

இந்தியா முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் மேதைகள் இக்கோவி லுக்கு வருகை தந்து சித்திவிநாயகரின் அருளையும், ஆசிர்வாதத்தையும் பெற்று செல்கின்றனர்.

மேலும், மறைந்த காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சசாரியார் ஜெயேந்திரர், முன்னாள் துணை குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கிருதனாத் மங்கேஷ்கர் உள்பட ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ganapati has put on a sweater, peoples are affected, Sarasbaug Ganapati temple, Shree Siddhivinayak, woollen cap, woollen sweater and cap, இயல்பு வாழ்க்கை பாதிப்பு, கணேசர், சரஸ்பாக் கணபதி, புனே, மக்கள் பாதிப்பு, வரலாறு காணாத குளிர், ஸ்வெட்டர் அணிந்த விநாயகர்
-=-