புதுடெல்லி:
முதல் முறையாக புதிய போர் சீருடையை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய இராணுவம் தனது புதிய போர் சீருடையை முதல் முறையாக வெளியிட்டது. பாராசூட் படைப்பிரிவின் கமாண்டோக்கள், புதிய சீருடையில் அணிந்து, ராணுவ தினமான இன்று டெல்லி கான்ட் அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.

2022 ராணுவ தின அணிவகுப்பில் ராணுவம், தனது புதிய போர் சீருடையை வெளிப்படுத்தும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது.

படையின் பல தசாப்த கால போர் மாற்றியமைக்கும் புதிய சீருடை, பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தியதைப் போன்ற டிஜிட்டல் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்துடன் (NIFT) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சீருடை, வீரர்களுக்கு அதிக வசதியையும், வடிவமைப்பில் சீரான தன்மையையும் வழங்கும். இது ராணுவத்தின் பணித் தேவைகள் மற்றும் ராணுவ வீரர்களின் போர் பணியின் போது ஏற்படும் களைப்பை நீக்கி சீரான தன்மையுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு ஒற்றுமையைக் காட்டுவதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த ஆடைகளை அணிவார்கள். மேலும், புதிய சீருடை, ஏற்கனவே உள்ளதைப் போலல்லாமல் பேன்ட்க்கு டாக்இன் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.