_92686466_036614123ஞாயிற்றுக்கிழமை குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், 6-ஆம் நிலை வீரர் குரோஷியாவின் மரின் சிலிச் மற்றும் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ மோதினர். இப்போட்டியின் டெல் போட்ரோ, 7-5, 6-4, 6-3 என்ற கணக்கில் சிலிச்சை தோற்கடித்தார். இப்போட்டியின் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது அர்ஜென்டினா.
2-ஆவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஃபெடெரிக்கோ டெல்போனிஸ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் இவோ கார்லோவிச்சை வீழ்த்த, ஆர்ஜென்டீனா சாம்பியன் ஆனது.

ஆர்ஜென்டீனா,116 ஆண்டுகால டேவிஸ் கோப்பை வரலாற்றில், கோப்பையை வென்ற 15-ஆவது நாடு என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன்னர் நான்கு முறை இறுதிச்சுற்று வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய ஆர்ஜென்டீனா, இம்முறை கடுமையான போராட்டத்துக்குப் பின் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.