பட்டேல் சிலையை விட உயரமாக ஆந்திராவின் புதிய சட்டமன்றம்: சந்திரபாபு நாயுடு முடிவு

அமராவதி:

ந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட இருக்கிறது,  இந்த கட்டிடமானது 182 மீட்டர் உயரமுள்ள ‘ஸ்டேட்சு ஆப் யூனிட்டி’  என்ற பட்டேல் சிலையை விட 68 மீட்டர் உயரமானதாக அமைக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு நெருக்கமாக இருந்த தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு வழங்க மோடி அரசு மறுத்துவிட்டதை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுக்கு எதிராக அரசியல் வியூகம் வகுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவுக்கு புதிய சட்டமன்றம், தலைமை செயலகம் போன்றவை அமராவதியில் கட்டப்பட்டு வருகிறது. ஆந்திராவில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆந்திர சட்டசபை, திட்டமிட்ட படி கட்டி முடித்தால், நாட்டின் உயரமான கட்டிடமாக இது இருக்கும் என கட்டுமான நிறுவன அதிகாரி கூறி உள்ளார்.

இந்த புதிய கட்டிடம் மூன்று மாடிகளை கொண்டும்,  அதன் மீது 250 மீட்டர் உயரத்திற்கு சுழலும் கோபுரம் அமைக்கப்படும் என்று கூறியவர்,  கட்டிடத்தின் வடிவமைப்பை  சிறிய மாற்றங் களுடன்  வடிவமைக்கப்பட்டுள்ளதாக நார்மா பாஸ்டர்ஸ் என்னும் கட்டிட நிறுவனம் கூறி உள்ளது.

இதன் ப்ளூ பிரிண்ட்-ஐ மாநில அரசிடம் இன்னும் சில தினங்களில் ஒப்படைக்க இருப்பதாகவும், அதற்கு முதல்வரின் ஒப்புதலை கிடைக்கும் பட்சத்தில்,  நவம்பர் மாத இறுதிக்குள் அரசு டெண்டர்களை பெற்று, இரண்டு ஆண்டுகளில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பி நாராயணா.  அமராவதியில் அமைக்கப்படும் இந்த சட்ட சபையின் கோபுரம் நில நடுக்கம், புயல், சூறாவளி போன்றவைகளை தாங்கும் திறனோடு கட்டப்படுவதாகவும்,  முதல் 80 மீட்டர் கட்டடத்தில் சுமார் 300 பேர் வரை அமர்ந்து பணியாற்றும் விதத்தில் அமைக்கப்படும் என்றார்.

அதுபோல, அமைக்கப்பட உள்ள  250 மீட்டர் உயர கோபுரத்தில் அதிகபட்சம் 20 பேர் வரை ஒரே சமயத்தில் மேலே சென்று அமராவதி நகர் அழகை ரசிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையைத் தொடர்ந்து அதற்கு அருகிலேயே ஐந்து மாடி  தலைமைச் செயலக கட்டடமும் கட்ட இருப்பதாக தெரிவித்தார். இந்த ஐந்துமாடி  தலைமை செயலக கட்டடங்களின் கட்டுமான விவரம் தொடர்பாக தேவையான டெண்டர்களை தயாரிக்க ஆந்திர தலைநகர மேம்பாட்டு ஆணையத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஒற்றுமையின் சிலை திறக்கப்பட்ட சமயத்தில், அதனை மிஞ்சும் வகையில் தாங்களும் எதாவது செய்யவேண்டும் என்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 201 மீட்டர் உயரமுள்ள ராமர் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதே போல், கர்நாடக அரசும் 125 அடியில் காவேரி அன்னையின் சிலையை நிறுவப்போவதாக தெரிவித்தது. குஜராத் அரசும் 80 உயர புத்தர் சிலையை அமைக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் சாதனையை முறியடிக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு பட்டேலின் சிலையை விட உயரமான கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Andhra Assembly, Andhra gets new Assembly building in Amaravati, chandrababu naidu, modi, பட்டேல் சிலையை விட உயரமாக ஆந்திராவின் புதிய சட்டமன்றம்: சந்திரபாபு நாயுடு முடிவு
-=-