துரை

மேலூர் அருகே  அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்காக வாகனம் ஓட்ட பழகிய இரு சகோதரிகள் கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளனர்.

தமிழக அரசு சமீபத்தில் அம்மா இருசக்கர வாகனம்  மானியத் திட்டம் என திட்டம் ஒன்றை அறிவித்தது.   அதன்படி பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க  மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.   இந்த திட்டத்தில் பயனடைய பெண்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் அவசியம் என அரசு அறிவித்திருந்தது.

இதையொட்டி பல பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.   பலரும் மும்முரமாக ஓட்ட கற்றுக் கொண்டு வருகின்றனர்.  அது போல மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு என்னும் கிராமத்தில் வெண்ணிலா மற்றும் பிரியங்கா என்னும் சகோதரிகள் அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக இருவரும் மும்முரமாக இருசக்கர வாகனம் ஓட்ட பழகி வந்துள்ளனர்.   அவ்வாறு ஓட்டப்  பழகும் போது வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து சகோதரிகள் வெண்ணிலா,  பிரியங்கா இருவரும் தவறி கிழே விழுந்து விட்டனர்.   அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.   மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் மரணம் அடைந்துள்ளனர்.