அமிதாப் பச்சன்
 
டி20 உலகக்கோப்பை 2016 போட்டியில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மார்ச் 19, சனிகிழமையன்று நடைப்பெற்றது.
இந்தப்போட்டியின் துவக்கத்தில் மேற்குவங்க முதலமைச்சர் கலந்துக் கொண்டு கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் முன்னாள் வீரர்களைக் கௌரவித்தார். இதில்  அமிதாப்பச்சன்  இந்தியாவின் தேசியக் கீதத்தை தேசப்பக்தியுடன் பாடி சிறப்பித்தார்.
ஆனால் சில விஷமிகள் அமிதாப் தேசியக் கீதத்தைப் பாட  நான்கு கோடி கட்டணம் வாங்கினார் என வதந்தியைப் பரப்ப அது தீயாய் சமுகவலைத்தளங்களில் பரவி, அமிதாப்பின் தேசப்பக்தியை கேள்விக்குறியாக்கும்  அளவிற்கு மாறி பலரின் அறச்சீற்றதிற்கு உள்ளானார் அமிதாப்பச்சன்.
இது குறித்து  மேற்குவங்க கிரிக்கெட் சங்க நிர்வாகி சௌரவ் கங்குலி விளக்க மளித்துள்ளார்.
ஒரு பைசா கூட அமிதாப் கட்டணம் வாங்கவில்லை எனவும், இந்தப் பணியை அன்பிற்காகவெ செய்வதாகவும், இதில் பணம் வாங்குவதைத் தான் விரும்பவில்லையென்றும் கூறி தன்னுடைய விமானச்பயணம் மற்றும் தங்கும் கட்டணச் செலவினைக் கூட தாமே செய்துக் கொள்வதாக அமிதாப் கூறியதாக விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
மோசமான வானிலையிலும் தாம் பாட இருந்த பாடலுக்கு ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
பழம்பெரும் நடிகரான அமிதாப்பச்சன் தனது கம்பீரமான குரலின் மூலம் கொல்கத்தா ரசிகர்களினை மெய்சிலிர்க்க வைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
அவர் தேசியகீதம் பாடிய காணொளியை கீழே காணலாம் .
https://www.youtube.com/watch?v=zWDELh8CGOo
 
தொடர்புடையச் செய்திகள் : (இணைப்பைச் சொடுக்கவும்)
தொடர்ந்து உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மீது ஆதிக்கம். 
இந்திய அணிக்கு மோடி வாழ்த்து